பிரிய டைரிகளின் குறிப்புகள்
தாள்கள் மிச்சம்
இருக்கின்றன
நினைவுகள்
நிறைய இருக்கின்றன
மை தீர்ந்து
விட வில்லை
எழுதுவதற்கான
வலு இல்லை என்பதால்
டைரிகள் பட்டினி
கிடக்கின்றன
பால் கணக்கோ
மளிகை கணக்கோ
எழுதி
அதை ஆசுவாசப்படுத்த
வேண்டும்
மேலும் கடன்
கணக்கை எழுதி
வாய் பிளக்க
வைத்து விடக் கூடாது
கால ஓட்டத்தில்
காலாவதியாகிப்
போன டைரியில்
வீட்டுப்பாடல்
எழுதிச் செல்லும்
பிள்ளைகளை
ரசிக்கும் ஆசிரியர்கள்
பாக்கியவான்கள்
சித்திரக்
குப்தனின் ஏடென
குழந்தைகளின்
சித்திரங்களாய் நிறைந்த
டைரி கிடைத்தால்
மட்டும்
என்னைக் கண்டுபிடித்து
என்னிடம் ஒப்படைத்து
விடுங்கள்
*****
நன்றி - ஆனந்த விகடன் 31.01.2018 இதழ் - பக்கம் 77
No comments:
Post a Comment