25 Jan 2018

வெள்ளொளி துக்கம் அனுஷ்டிக்கிறது!

வெள்ளொளி துக்கம் அனுஷ்டிக்கிறது!
ஏழு வண்ணச் சட்டை போட்ட
வெள்ளை ஒளியை
ஒற்றை வண்ணமாய்ப் பார்த்த தவற்றை
நீயும் செய்தாய்
வண்ணங்கள் என்றால்
கண்ணுக்குத் தெரிய வேண்டும் என்று
வாதம் பேசினாய்
நான் எவ்வளவோ மன்றாடிக் கேட்டும்
வெள்ளை ஒளி
ஏழு வண்ணச் சட்டைகளையும்
கழற்றிக் காட்ட மறுத்தது
நான் அழுது கொண்டே
நீ சொன்னதையே திருப்பிச் சொன்னேன்
வண்ணங்கள் என்றால்
கண்ணுக்குத் தெரிய வேண்டும்
கண்ணுக்குப் புலப்படாத
காதலை எடுத்துக் கொண்டு புறப்பட்டேன்
கேலி பேசிச் செய்யும் வெடிச்சிரிப்பு
முட்டித் தள்ளிக் கொண்டு
செவிகளில் நுழையத் துவங்கியது
ஏழு வண்ணச் சட்டைகளையும்
மிக்ஸியில் போட்டு அடித்து
கருப்புச் சட்டையாக்கி அணிந்து கொண்டு
துக்கம் அனுஷ்டிக்க ஆரம்பித்தது வெள்ளை ஒளி
*****

நன்றி ஆனந்த விகடன்  - இதழ் 24. 01. 2018 பக்கம் - 85

No comments:

Post a Comment

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை!

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை! மனிதர்களும் விலங்குகளும் குறிப்பிட்ட காலம் வரை வளர்கின்றனர். தாவரங்கள் அப்படியல்ல. ஆயுள் ம...