9 Jan 2018

நீயே முடிவு செய்!

நீயே முடிவு செய்!
உன் அஸ்திரங்கள் ஒவ்வொன்றிலும்
பழிவாங்கலின் வெறி
அதை மார்பில் தாங்கும்
இதயம் முழுதும் வைக்கோல் போரின் மென்மை எனக்கு
வைக்கோல் போரிய குத்திய அம்புகளை
என்ன செய்ய வேண்டும் என்று எனக்குத் தெரியும்
எய்த அம்புகளை என்ன செய்ய வேண்டும்
என்று நீதான் முடிவு செய்ய வேண்டும்.
உன் மரணப் படுக்கையில்
உயிர் பிரியா வேதனையில்
உன் உயிர் பிரித்து
உன் பெருவலிப் போக்கும்
மந்திரங்கள் மாயங்கள்
ஏதுமில்லை என்னிடம் என்பதால்
நீதான் முடிவு செய்ய வேண்டும்.

*****

No comments:

Post a Comment

மறைந்திருப்பதால் மறந்திருக்க முடியுமா?

மறைந்திருப்பதால் மறந்திருக்க முடியுமா? பழங்களையல்ல வேர்களைக் கவனியுங்கள் பழங்கள் கண்ணுக்குத் தெரிகின்றன வேர்கள் மறைந்திருக்கின்றன பழ...