9 Jan 2018

போராட்ட & ஆறுதல் பொங்கல் வாழ்வு

போராட்ட & ஆறுதல் பொங்கல் வாழ்வு
            சென்ற ஆண்டு பொங்கலுக்கு ஜல்லிக்கட்டுப் போராட்டம் என்றால், இந்த ஆண்டுப் பொங்கலுக்குப் போக்குவரத்துத் தொழிலாளர்களின் போராட்டம்.
            பொங்கல் என்றால் பொங்குதல் என்பது சரியாகத்தான் இருக்கிறது.
            போக்குவரத்துத் தொழிலாளிகளின் போராட்டம் கணிசமானத் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
            விளிம்பு நிலை மக்கள், அடித்தட்டு மக்கள் ஒரு கால் உடைந்ததைப் போல் உணர்கிறார்கள். நடுத்தர வர்க்கம் முழி பிதுங்குகிறார்கள்.
            பெருகி இருக்கும் இரு சக்கர வாகனங்கள் நிலைமையை ஒருவாறாகச் சமாளிக்க உதவுகின்றன.
            கார் இருப்பவர்களுக்கு எந்தக் கவலையும் இல்லை.
            வரும் தேர்தலில் ஓட்டுக்கு ஒரு இரு சக்கர வாகனமோ அல்லது ஒரு காரோ கொடுத்தால் இது போன்ற போராட்டங்கள் ஏற்படும் போது எந்தப் பிரச்சனையும் இருக்காது. சம்பந்தப்பட்டவர்கள் யோசிக்க வேண்டும்.
            இதில் அதாவது நிலைமை இப்படி இருக்க, வரக் கூடிய செய்திகள் இன்னும் வேடிக்கையாக இருக்கின்றன. அதில் ஒன்று அப்பேருந்துகள் பல இயக்கவே தகுதியற்றவைகள் என்றும் அதைத்தான் சிரமப்பட்டு இயக்கிக் கொண்டிருந்தோம் என்று போராடுபவர்கள் தெரிவிப்பது. அதை இயக்கியதற்காகவே அவர்களுக்குத் தாராளமாக ஊதிய உயர்வு கொடுக்கலாம்.
            அவர்களின் போராட்டம் முடியும் போது, இயக்கவே தகுதியற்ற அந்தப் பேருந்துகளையே மறுபடியும் கொடுத்து, உயிர்களுடன் விளையாடாமல், இயக்கத் தகுதியுள்ள பேருந்துகளாகக் கொடுக்க வேண்டும் என்பது பொது சனத்தின் முக்கிய எதிர்பார்ப்பு.
            பள்ளங்களும், குழிகளும் நிறைந்து இங்கு பல சாலைகள் தகுதியற்றவைகளாக இருக்க, அதில் ஓடிய பேருந்துகளும் ஓடத் தகுதியற்றவைகள் என்றால், அதையும் தாண்டி, இதில் ஒரு போக்குவரத்து நடந்தது, நடந்து கொண்டிருக்கிறது என்பதற்காக ஆறுதல் பட்டுக் கொள்வதா என்ன!

*****

No comments:

Post a Comment

ஆசைகளை அரித்த கறையான்

ஆசைகளை அரித்த கறையான் சிறுக சிறுக சேர்த்த பணம் ஒவ்வொரு நாளாய்ச் சேர்த்த பணம் வாயைக் கட்டி வயிற்றைக் கட்டி மிச்சப்படுத்திச் சேர்த்த ப...