21 Jan 2018

இனிதினிது

இனிதினிது
காதல் சொல்வதற்காய்
வாங்கித் தந்த ரோஜா
பிறந்த நாளுக்கு வாங்கித் தந்த மோதிரம்
முதல் மாதச் சம்பளத்தில்
வாங்கித் தந்த சுரிதார்
போனஸ் வந்ததென்று
கண்களைப் பொத்தி
சஸ்பென்ஸ் கூட்டி
ஒளிர விட்ட புது மாடல் செல்பேசி
வாங்கிப் போட்ட ஷேர்கள்
பத்து மடங்காக
அதை விற்று என் பெயரில்
வாங்கிய ப்ளாட்
யாவற்றினும் இனிது
நானே அறியாமல்
நானும் சொல்லாமல்
எனக்காக நீ
வாங்கி வந்து வைத்திருக்கும்
நாப்கின்கள்!

*****

No comments:

Post a Comment

நான் ஏன் வலைப்பதிவில் மட்டும் எழுதுகிறேன்?

நான் ஏன் வலைப்பதிவில் மட்டும் எழுதுகிறேன்? நான் ஏன் வலைப்பதிவில் மட்டும் எழுதிக் கொண்டிருக்கிறேன் என்று என்னைக் கேட்காத ஆட்களில்லை. அப்ப...