கை வைத்து உச்சம் தொட்டப் பிரச்சனைகள்
எஸ்.கே.வின் மனதுக்கு தற்போது ஒரு அமைதியில்லை
என்பது உண்மை. அதை மீண்டும் மீண்டும் ஓய்வின் மூலமும், ஏதேதோ பச்சிலைகள் அரைத்துச்
சாப்பிடுவதன் மூலமே மீட்டுக் கொண்டு வருகிறான்.
போதிய ஓய்வு அவ்வபோது தேவை என்பதை உணர்கிறான்.
ஓய்வின்மை காரணமாக தொடர்ச்சியாக கோபம் கொண்டு, அதனால் நிலைமையைச் சரியாகப் புரிந்து
கொள்ள முடியாமல்... அப்பப்பா தேவையில்லாத பிரச்சனைகள். இந்த அனுபவத்திலும் நிறைய பாடங்கள்
அவனுக்கு.
இந்நேரத்தில் உதவி பற்றி அவனுடைய கருத்தொன்று
முக்கியத்துவம் வாய்ந்தது.
யாருக்கும் உதவ வேண்டும் என்று நினைக்கக்
கூடாது. ஏனென்றால் அப்படி ஒரு உதவி அவர்களுக்குத் தேவையே இல்லை. இவர்கள் எதிர்பார்க்கும்
உதவி என்பது சுரண்டுவதற்கும், ஏமாற்றவதற்கும் எதிர்பார்க்கும் உதவிகளாகவே இருக்கின்றன.
மே ஐ ஹெல்ப் யூ? என்ற வாசகத்தோடு அலையும்
எஸ்.கே. சிக்க வைக்கப்படுகிறான்.
எஸ்.கே.வாக யாருக்கும் துன்பம் கொடுக்கக்
கூடாது என்பதுதான் அவனது விதி. அதுவாக சிலருக்குத் துன்பங்கள் சேர்வதற்கு அவன் என்ன
செய்ய முடியும்? அவர்களின் துன்பத்தை அவனால் இயன்ற வகையில் துடைக்கிறேன் பேர்வழி என்று
அவன் துன்பத்தில் சிக்கிக் கொள்கிறான்.
குறிப்பாக இந்தப் ப்ளாட்காரன்களுக்கு எதாவது
உதவி செய்ய வேண்டும் என்று என்ன அவசியம்? வாங்கும்
ஊதியம் குறைவா என்ன? அவரவர் மனநிலையால் தனக்குத் தானே துன்பத்தைச் செய்து கொள்பவர்க்கு
யார் என்ன செய்ய முடியும்? அவரவர் அதை அதுவாகத்தான் நீக்கிக் கொள்ள வேண்டும். அதற்கு
உதவிச் செய்கிறேன் பேர்வழி என்று போய் எஸ்.கே. தேவையில்லாத இடர்பாடுகளில் சிக்கிக்
கொள்கிறான். (இது முன்பே சொல்லப்பட்டதுதான். ஆனால் எஸ்.கே. ஒரே மாதிரியாக மீண்டும்
மீண்டும் சிக்கிக் கொள்கிறான் என்பதால் அதன் முக்கியத்துவத்தை வலியுறுத்த மீண்டும்
சொல்ல வேண்டியதாகிறது.) ஏனென்றால் இயற்கையின் விதி அதற்கு அப்படி நடக்க வேண்டும் என்று
இருக்கிறது. அதை எஸ்.கே. போய் அநாவசியமாக மாற்றக் கூடாது. அப்படி மாற்ற நினைத்தால்
அதன் பின்விளைவுகளுக்கு எஸ்.கே. பொறுப்பாவான்.
சில விசயங்கள் சில மோசமான அனுபவங்களால்தான்
முறைக்கு வருகின்றன. அப்படி ஒரு மோசமான அனுபவத்துக்கு அதை விட்டு விடுவதை விடுத்து,
அதைத் தாங்கிப் பிடித்தால் எஸ்.கே.வுக்குதான் அந்த துன்பங்கள் சேர்கின்றன. அது ஒரு
பக்கம் என்றால்... எஸ்.கே. கை வைத்த பிரச்சனைகள் எல்லாம் தீர்க்க முடியாத அதிதீவிரத்தை
ஏன் அடைகின்றன என்பது இன்று வரை புரியவில்லை.
*****
No comments:
Post a Comment