படைப்பாளிகளின் கோபம் தொடர்பான பிரச்சனைகள்
படைப்பின் வடிவம் முக்கியமா? படைப்பில்
சொல்லப்படும் கருத்து முக்கியமா? எஸ்.கே. பலமுறை குழம்பியிருக்கிறான். எது முக்கியம்
என்பதை விட என்ன நிகழ்கிறது என்பதுதான் கவனிக்கத்தக்கது. இதுதான் நடக்கிறது.
உங்கள் கருத்தும், சிந்தனையும் முக்கியம்
எனப் படும் போது படைப்பைப் பின்னுக்குத் தள்ளி விடுவீர்கள். நீங்கள் உங்கள் கருத்தைத்தான்
முன் வைப்பீர்கள். உங்களுக்குத் தகுந்த மாதிரி படைப்பு தன் வடிவத்தை மாற்றிக் கொள்ளும்.
இதைச் சொன்னால் எஸ்.கே.வுக்கு கோபந்தான்
வரும்.
ஏன் அவனுக்கு இவ்வளவு கோபம் வருகிறது
என்று தெரியவில்லை. அவனால் முடிந்தது அவ்வளவுதான்.
முடியாதவர்களிடம் போய் அதைச் செய், இதைச்
செய் என்று கட்டாயப்படுத்தக் கூடாது. யாரிடம் எதைச் சொல்ல வேண்டுமோ அவர்களிடம் அதைச்
சொல்ல வேண்டும். அவர்கள் அப்படித்தான் எனும் போது அப்படியே இருக்கட்டும் என்று விட்டு
விட வேண்டும். அவர்களை மாற்றுகிறேன் என்று இறுக்கம் ஆவதில் என்ன இருக்கிறது?
எதைச் சொன்னாலும் கேட்காதவர்கள், சொல்வதை
உணராதவர்கள் இருக்கிறார்கள். அவர்களிடம் சொல்லி விட்டு அவர்கள் சொல்வதைக் கேட்க மாட்டேன்கிறார்கள்
என்றால் எப்படி? செவிடன் காதில் ஊதிய சங்கை அவன் ஏன் கேட்கவில்லை என்று கேட்பதைப் போன்றது
அது.
எஸ்.கே.வுக்கு படைப்பின் வடிவம் முக்கியம்
என்றால் அப்படியே எழுதி விட்டுப் போகட்டும். படைப்பு சொல்லும் கருத்துதான் முக்கியம்
என்றால் அப்படியே எழுதி விட்டுப் போகட்டும்.
இதையும் மீறி பிரச்சனை ஏற்படுகிறது என்றால்... விளைவை ஆராயாமல் செயலில் இறங்கி விடுவதுதான்
காரணம்.
*****
No comments:
Post a Comment