6 Jan 2018

சாகாத நட்டுவாக்காலிகள்

சாகாத நட்டுவாக்காலிகள்
ஒரு முறை வந்து
கடித்து விட்டு
நசுங்கிக் செத்த
நட்டுவாக்காலி
தினம் தினம் வந்து
கடிப்பதாகப் புலம்பிக் கொண்டிருக்கிறாள்
புகுந்தகத்துக்கு வந்த புதுப்பெண்.
அவள் ஞாபகக் கூட்டில் வாழும்
நட்டுவாக்காலியைத்
தினம் தினம் ஞாபகப்படுத்துவது போல்
கொட்டிக் கொண்டிருக்கிறார்கள்
அவளுக்கு வாய்த்த
அத்தையும் மாமாவும்.
நட்டுவாக்காலிகள் சாகாது என்று
நம்பும் அவளை
நட்டுவாக்காலியை விட
பயங்கரமாகப் பயமுறுத்தி எழுகின்றன
விஷம் முற்றியக் கனவுகள்.

*****

No comments:

Post a Comment

நாம் ஏன் தேவையில்லாமல் குறுக்கிட வேண்டும்?

நாம் ஏன் தேவையில்லாமல் குறுக்கிட வேண்டும்? மீன்களுக்கு நாம் நீர் நிலைகளை அமைத்துத் தர வேண்டுமா? அல்லது, தட்டான்களும் வண்ணத்துப் பூச்சி...