5 Jan 2018

புதிய பரிணாமம்

புதிய பரிணாமம்
தான் கண்ட கனவில்
ஒரு குரங்காய்ப் பிறந்து
ஒரு குரங்கோடு கூடி
ஒரு குரங்குக் குட்டிப் பெற்று
ஒரு குரங்காய் மரித்து விட்டதாகச்
சொன்னார்
உயிர் போகாமல்
இழுத்துப் பிடித்துக் கொண்டு
கட்டிலோடு கட்டிலாய்
ஆறு மாதங்களாய்க் கிடக்கும்
கோலப்பன் தாத்தா.

*****

No comments:

Post a Comment