4 Jan 2018

கார்ப்பரேட் புத்தர்

கார்ப்பரேட் புத்தர்
முதன் முறை அரண்மனையிலிருந்து
எதற்காக வெளியேறினாரோ புத்தர்
இம்முறை அதற்காக
சங்கத்திலிருந்து வெளியேறினார்
டிராபிக் சிக்னல் மரம் ஒன்றின் அடியில்
ஞானம் பெற்ற அவர்
டைடல் பார்க்கில்
தன் முதல் பிரசங்கத்தைத் தொடங்கினார்
வரலாற்றில்
கார்ப்பரேட் புத்தர் என்று
புகழப்பட்ட அவரை
வேற்று கிரகத்திலிருந்து பார்க்கும்
பாக்கியம் பெற்றன
மனிதப் பிறவிகள்.

*****

No comments:

Post a Comment

கடனின்றிக் கல்வி கற்பது சாத்தியந்தானா?

கடனின்றிக் கல்வி கற்பது சாத்தியந்தானா? கல்விக்கடன் சரியா? “கற்கை நன்றே கற்கை நன்றே பிச்சை புகினும் கற்கை நன்றே” என்றார் அதிவீரராம பா...