3 Jan 2018

பாழடைந்த வீட்டில் வசித்த மரம்

பாழடைந்த வீட்டில் வசித்த மரம்
பாழடைந்த வீட்டை
இடித்த போது கவனித்தோம்
அதன் சுவர்களில் வசித்து வந்த
பழைய மரத்தை.
வெளவால்கள் வருவதற்குள்
மரத்தை வெட்டி
வீட்டை இடித்து விட்டால்
காம்பளக்ஸ் கட்டி
வாடகைக்கு விட்டு விடலாம்
சுடுகாட்டிற்குப் பக்கத்திலோ
குப்பைக் கிடங்கின் ஓரத்திலோ
வெளவால்களைத் துரத்தி விட்டு
தலைகீழாகத் தொங்கிக் கொண்டிருக்கலாம்
வாடகைச் சம்பாத்தியத்தில்.
வெளவால்கள் எதிர்த்தால்
கொன்று கறியாக்கி தின்று புசிக்கலாம்
எப்படிப் பார்த்தாலும்
ஆதாயம் நமக்கு
சேதாரம் அவைகளுக்கு.

*****

No comments:

Post a Comment

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை!

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை! மனிதர்களும் விலங்குகளும் குறிப்பிட்ட காலம் வரை வளர்கின்றனர். தாவரங்கள் அப்படியல்ல. ஆயுள் ம...