18 Jan 2018

ஏரியே! உப்புக் கடலாகி விடு!

ஏரியே! உப்புக் கடலாகி விடு!
கரையுடைத்த ஏரியென
நிரம்பிய மனம்
வறண்டு கிடக்கிறது.
அன்புக்குப் பஞ்சமில்லை
என்று சொன்ன காலம் போய்
அன்பே பஞ்சமாய் இருக்கிறது.
ஆற்று நீர் வந்தோ, மழை நீர் வந்தோ
நிரம்பும் ஏரிக்கு
கரை சுருங்கிக் கொண்டிருப்பதும்,
ஆழம் தூர்ந்து கொண்டிருப்பதும்
நீரின்மையால் நிகழ்வன என்பதை
நெஞ்சில் ஈரமற்ற
இந்த கல்நெஞ்சுகாரர்களுக்கு சொல்லி மாளாது.
ஆக்ரோஷமான அலையடிக்கும் கடலின்
கரையைச் சுருக்குவதும்,
ஆழத்தைத் தூர்ப்பதும் நடக்கக் கூடியதா என்ன?
அன்பான மனனே
குடிக்க முடியாத உப்புக் கடலாகி விடு
ஏரியாக வேண்டாமென
உன்னை வேண்டிக் கொள்கிறேன்.

*****

No comments:

Post a Comment

நீங்களே தீர்மானிக்கிறீர்கள்! நீங்களே அனுபவிக்கிறீர்கள்!

நீங்களே தீர்மானிக்கிறீர்கள்! நீங்களே அனுபவிக்கிறீர்கள்! வாகனம் ஓட்டும் போது நீங்கள் சொல்லாமலே புரிந்து கொள்வீர்கள் எதையும் நீங்கள் அதன...