24 Jan 2018

பிரகடனம்

பிரகடனம்
கூடு கட்டி வாடகைக்கு விடாத
பறவைகளைப் பிடித்திருக்கிறது
தானுண்ட தண்ணீர் தெரியாமல்
நீந்திக் கொண்டிருக்கும்
மீன்களைப் பிடித்திருக்கிறது
உண்பதும் உலாத்துவதுமான
விலங்குகள் எல்லாம் பிடித்திருக்கிறது
நின்ற இடத்தில் நிற்பதாயினும்
மரங்களும் பிடித்திருக்கிறது
இவைகளின் ஊடாக
தானும் ஒரு சக ஜீவனாக வாழும்
மனிதர்களைப் பிடித்திருக்கிறது
இவைகளையெல்லாம் அழித்து விட்டு
தானும் அவற்றில் ஒன்றாக அழியப் போகும்
மனிதர்களையும் பிடித்திருக்கிறது
எந்த மனிதர்களையும் வெறுக்கும் எண்ணம்
எமக்கில்லை
அவர்களின் அழிவை
அவர்களே தேடிக் கொள்வார்கள்
எமக்குப் பிடித்தமானவர்
எம்முடன் கூடவே இருப்பார்கள்.

*****

No comments:

Post a Comment

அனுபவங்களின் பின் நிற்கும் முடிவுகள்

அனுபவங்களின் பின் நிற்கும் முடிவுகள் ஏதோ ஒன்றைத் தேட தேடுவது கிடைக்கவில்லை என்பதைத் தவிர வேறொன்றும் பிரச்சனையில்லை இவ்வளவுதான் இப்பட...