23 Jan 2018

பறவையாகும் படகு

பறவையாகும் படகு
கடலை வரைந்து
படகை மிதக்க விட்டு
உறங்கப் போனாள் பாப்பா
படகு மிதந்து கொண்டே இருந்தது
மீண்டும் பாப்பா எழுந்து வந்து
அதை அழித்து விட்டு
பறவையாக்கும் வரை.

*****

No comments:

Post a Comment