20 Jan 2018

அம்மாவின் நாக்கு

அம்மாவின் நாக்கு
ண்ணனுக்காக ஈரலைப்
பதுக்கி வைப்பாள்
அக்காவுக்குக் கொஞ்சம் கூடுதலாய்க்
குழம்பு போட்டுச் சமாளித்து விடுவாள்
அப்பாவின் நல்லியெலும்பில்
யாரும் கை வைக்க விட மாட்டாள்
தம்பிக்குக் கொழுப்பு என்றால் பிரியம் என்று
தனியாக எடுத்து வைத்து வைப்பாள்
காலிச் சட்டிப் போதும் என்று
அதில் கொஞ்சம் சோற்றைப் போட்டு பிசைந்து
என்னா ருசி என்று பிசைந்து சாப்பிடும்
அம்மாவின் முன்
ஆசையாய் ஊட்டிக் கொள்ள
அருகில் போய் நிற்பான்
கடைக்குட்டி அம்மணச் சுப்புணி.

*****

No comments:

Post a Comment

தேர்தல் 2620 – யார் ஜெயிப்பார்? யார் தோற்பார்?

தேர்தல் 2620 – யார் ஜெயிப்பார்? யார் தோற்பார்? தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு இருக்கிறது. அதற்குள்ளேயே இந்தத் தேர்தலில் யார் ஜெயிப்பார், யார்...