2 Jan 2018

சொல் வாகனங்கள்

சொல் வாகனங்கள்
சொற்கள் வாகனங்களைப் போல
எண்பது கிலோ மீட்டர் வேகத்தில்
வந்து கொண்டு இருக்கும்
சில‍ நேரம் டிராபிக்கில் மாட்டிக் கொள்ளும்
பள்ளம் மேடான வாழ்க்கைச் சாலையில்
பக்குவமாய்ப் பயணிக்கும்
விபத்தென்று வந்து விட்டால்
அர்த்தங்கள் அடிபடும்
ஐ.சி.யு.வில் கிடக்கும் ஆன்மா
மெளனத்தின் மேன்மையாய்ப்
புலம்பிக் கிடக்கும் சொற்கள்
ஆறுதலுக்கு அருகில் நின்று
கேட்டுக் கொண்டிருக்கும் தனிமை
கட்டிலுக்கு அடியில்
குஷியாக ஓடித் திரியும்
கரப்பான் பூச்சிகள்
மூட்டைப் பூச்சிகளை நசுக்கத் தோன்றாமல்
தத்துவம் பேசிக் கொண்டிருக்கும்
சொற்களைப் பிடித்து
நான்கு அறை விட்டால் தேவலாம் போலிருக்கும்
கட்டப்பட்டிருக்கும் கைகள்
பாவச் சொற்கள் முன்
மண்டியிட்டுக் கொண்டிருக்கும்.

*****

2 comments:

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா?

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா? விடிவதற்குள் ஒரு இரவில் நான்கு கோடி பாடல்களைப் பாடும் வல்லமை உள்ளவர்கள் நாட்டில் உள்ளார்களா எனச் சவ...