19 Jan 2018

கடைசியாகச் சுட்ட மெலிந்த தோசை

கடைசியாகச் சுட்ட மெலிந்த தோசை
அப்பா எட்டு தோசைகள் சாப்பிடுவார்
கொத்து மல்லிச் சட்டினி இருந்தால்
பத்து வரை சாப்பிடுவார்
முன்பெல்லாம்
அம்மா வியர்க்க விறுவிறுக்க
சுட்டுக் கொடுக்க
பதினைந்து இருபது வரை சாப்பிட்டவர்
அண்ணன் ஆறு ஏழு வரை சாப்பிடுவான்
அக்கா ஐந்து வரை சாப்பிடுவாள்
மாவு இருந்து தோசைகள் எஞ்சி இருந்தால்
அம்மா சாப்பிடுவாள்
கடைகுட்டியாய் நான்  ஊட்டச்சத்து குறைபாட்டோடு
பிறந்ததற்காய் அடிக்கடி அம்மாவைத் திட்டுவார் அப்பா
வறண்ட கண்களில் நீர் திரள முடியாமல்
விக்கித்து தளும்பும் அம்மாவுக்கு.

*****

No comments:

Post a Comment

வீடு மற்றும் நிலம் எப்படி மதிப்பற்றதாகிறது?

வீடு மற்றும் நிலம் எப்படி மதிப்பற்றதாகிறது? நிலத்திற்கு ஒரு மதிப்பு இருக்கிறது, வீட்டிற்கு ஒரு மதிப்பு இருக்கிறது என்று சொல்லப்படுகிறது. இ...