17 Jan 2018

உங்கள் கடவுளும், எங்கள் மனிதரும்!

உங்கள் கடவுளும், எங்கள் மனிதரும்!
பத்து அவதாரங்களுள்
ஒன்பது அவதாரங்களில்
விஷ்ணு அழித்த கதை அதிகம் என்றாலும்
காக்கும் கடவுள் அவனே ஆகிறான்!
வரம் கொடுத்தவன் தலையில்
கை வைத்து அவனையே
அழிக்க முயன்றாலும்
அழிக்கும் கடவுள் சிவனே ஆகிறான்!
கூன், குருடு, நொண்டி, நொடம் என
பார்த்த பின்னும் பிரம்மனே
படைக்கும் கடவுள் ஆகிறான்!
உங்கள் கடவுள்களை
நீங்களே வைத்துக் கொள்ளுங்கள்.
உங்கள் கடவுள்களால்
எங்கள் மனிதர்களை நசுக்காதீர்கள்.

*****

No comments:

Post a Comment

எப்படி வாடகை வருமானம் குறைவாக இருக்க முடியும்?

வீடென்பது பெருத்த மூலதனத்தின் துன்பியல் பொருளாதாரச் சுமை நீங்கள் வீட்டைக் கட்டி வாடகைக்கு விடுகிறீர்கள் அல்லது நீங்கள் வாடகை வீட்டில் கு...