16 Jan 2018

குஷியில் குறட்டை விடும் மனசு

குஷியில் குறட்டை விடும் மனசு
ஒரு மாறுதலுக்காய்
பயணச்சீட்டில்லாமல்
செய்த பயணம்
விட்டு விடுதலையானது போல இருந்தது.
காசு கொடுக்காமல்
குடித்து விட்டு வந்த டீ
ஏக திருப்தியாக இருந்தது.
பந்தியில் புகுந்து
யாரோ ஒருவர் திருமணத்தில்
தின்று விட்டு வந்ததில்
வயிறு நிறைவாக இருந்தது.
விழுந்து கிடந்த பர்ஸில்
இருந்த பணங்களை அள்ளி
பிச்சைக்காரிகளுக்குப் போட்டதில்
பாரம் குறைந்து இருந்தது.
டைல்ஸ் பதியப்பட்டிருந்த ப்ளாட்பாரத்தில்
இடம் கிடைத்த போது
குஷி தாங்காமல் குறட்டை விட்டபடி
சுருண்டு படுத்துக் கொண்டது
மறுநாள் பசிக்கு என்ன செய்வாய் என்று
எப்போதும் ஏகக் கூச்சல் போடும் மனசு.

*****

No comments:

Post a Comment

ஜெலன்ஸ்கி செய்ய வேண்டியது என்ன?

ஜெலன்ஸ்கி செய்ய வேண்டியது என்ன? 1991 இல் சோவியத் ரஷ்யா சிதறுண்டது. சோவியத்திலிருந்து பல நாடுகள் பிரிந்து சுதந்தர நாடுகளாகின. அப்படிப் பிரி...