14 Jan 2018

நினைவுகளின் நகம்

நினைவுகளின் நகம்
காலந்தோறும் நீ நகங்களைக் கடிப்பாய்
துப்புவாய்
நான் பொறுக்கியெடுப்பேன்
மென்று தின்பேன்
காலந்தோறும் காதலின் பசி எனக்கு
உன் நினைவுகளின் ருசி அடங்கிய
நகங்களைக் கடித்துக் கொண்டேயிரு
துப்பிக் கொண்டேயிரு
நான் பொறுக்கிக் கொண்டும்
தின்று கொண்டும் இருப்பேன்
காலத்தின் ஏக்கங்கள் தீரட்டும்
உன் நகங்கள் வளரட்டும்

*****

No comments:

Post a Comment

ஒரு நேரத்தில் ஒன்று!

ஒரு நேரத்தில் ஒன்று! ஒரு நேரத்தில் ஒரு விசயம் ஒரு நேரத்தில் ஒரு தாவல் ஒரு நேரத்தில் ஒரு நிலை ஒரு நேரத்தில் ஒரு படி ஒரு நேரத்தில் ஒ...