13 Jan 2018

அது போலில்லை முத்தம்

அது போலில்லை முத்தம்
முத்தம்
மின்சாரம் போல் இறங்கும் என்றாய்
பனித்துளி போல் உயிருக்குள் சில்லிடும் என்றாய்
தீ போல் மனசுக்குள் கனலும் என்றாய்
நகக்கண்ணில் குத்தும் ஊசி போல் இருக்கும் என்றாய்
வெடிகுண்டைப் போல் கனவுக்குள் வெடிக்கும் என்றாய்
மண்டைக்குள் பட்டாம்பூச்சிப் போல் சிறகடிக்கும் என்றாய்
முத்தம் முத்தம்தான்
என்னை எதுவும் செய்யவில்லை
ஒரு கல்வெட்டைப் போல்
நினைவின் மூலையில் பதிந்துக் கிடக்கிறது
ஒரு வரலாற்று சாட்சியம் போல்தான்
ஆணுக்கும் பெண்ணுக்கும் ஆகி
குழந்தைகளோடு குழந்தைகளாக
விளையாடிக் களித்துக் கொண்டிருக்கிறது
முத்தம் முத்தம் முத்தம் சத்தமின்றி

*****

No comments:

Post a Comment

சமநிலைச் சாத்தியங்கள் அசாத்தியங்களா?

சமநிலைச் சாத்தியங்கள்! ஒரு சமநிலையை உருவாக்குவதற்கு என்ன செய்ய வேண்டும்? ஏழைகளைப் பணக்காரர்களாக்க வேண்டுமா? பணக்காரர்களை ஏழைகளாக்க வேண...