கைகளுக்குள் ஒலிக்கும் கடல்
கடலிலிருந்து
பொறுக்கி வந்த
கிளிஞ்சலோடு
உறங்கிக் கொண்டிருக்கிறது
அம்முக்குட்டி
பாப்பா.
கிளிஞ்சலோடு
ஒடுங்கி
அம்முக்குட்டி
பாப்பாவின்
கைகளுக்குள்
ஒலித்துக்
கொண்டிருக்கிறது கடல்.
*****
சமநிலைச் சாத்தியங்கள்! ஒரு சமநிலையை உருவாக்குவதற்கு என்ன செய்ய வேண்டும்? ஏழைகளைப் பணக்காரர்களாக்க வேண்டுமா? பணக்காரர்களை ஏழைகளாக்க வேண...
No comments:
Post a Comment