11 Jan 2018

அவ்வளவு எளிதாக அனாதையாகி விட முடியாது

அவ்வளவு எளிதாக அனாதையாகி விட முடியாது
வெட்ட வெட்ட
துளிர்த்துக் கொண்டிருப்பதால்
வெட்டிக் கொண்டிருக்கிறோம்
மரங்களை.
தோண்டத் தோண்ட
ஊறிக் கொண்டிருப்பதால்
துளையிட்டு இறக்கிக் கொண்டிருக்கிறோம்
குழாய்களை.
எறிய எறிய
அகற்றப்படுவதால்
எறிந்து கொண்டிருக்கிறோம்
குப்பைகளை.
வீழ்த்த வீழ்த்த
விழுந்து கொண்டிருப்பதால்
பெருக்கிக் கொண்டே போகிறோம்
ஆணவத் திமிரை.
இதில் எதுவும் நடக்காமல்
போயிருந்தால்
அனாதையாகியிருப்போம்.
நல்லவேளை
அப்படியேதும் நடக்கவில்லை
அவ்வளவு எளிதாக
வாழ்வை முடித்துக் கொள்ள
விடப்பட மாட்டார்கள்
மனிதக்குடி பெருமக்கள் யாரும்.
வெட்டும் வரை நிழல் தந்து கொண்டிருக்கும் மரம்
தோண்டத் தோண்டத் தாங்கிக் கொண்டிருக்கும் பூமி
சங்கோஜப்படாமல் குப்பைகளைச்
சிதைத்துக் கொண்டிருக்கும் பாக்டீரியங்கள்.
ஆணவத் திமிரை அமைதியாகப் புன்னகையோடு
தாங்கிக் கொண்டிருக்கும் பொறுமை.

*****

No comments:

Post a Comment

இலவசப் பரிந்துரைகள் உலகில் இல்லை!

இலவசப் பரிந்துரைகள் உலகில் இல்லை! தற்காலத்தில் இலவசப் பரிந்துரைகள் இணையத்திலும் சமூக ஊடகங்களிலும் அதிகம் உலவுகின்றன. இலவசங்களுக்கும், இல...