1 Jan 2018

இயல்பாதலின் குறிப்பு விளக்கம்

இயல்பாதலின் குறிப்பு விளக்கம்
            நினைத்த மாத்திரத்தில் விற்பது, வாங்குவது எஸ்.கே.வின் இயல்பாகி விட்டது. அது எந்த அளவுக்குச் சரியாக இருக்கும்? என்றால் அதை ஆராய வேண்டும் என்பான். அதில் நிபுணத்துவம் வேண்டும், எதுவும் இல்லாமல் மனம் போன போக்கில் செய்வது ஆபத்தானது, பயிற்சி எடுத்துக் கொள்ள வேண்டும், அவசரப் படாமல் ஒன்றுக்கு பல முறை சோதித்துப் பார்க்க வேண்டும், அதற்கான ஹோம் ஒர்க்கைச் செய்யாமல் எல்லாம் இங்கு எதையும் அடைய முடியாது, இதையெல்லாம் யார் செய்வது? ரொம்ப கஷ்டம். நினைத்த மாத்திரத்தில் வாங்குவதற்கும், விற்பதற்கும் இதெல்லாம் தேவையில்லை என்பதால்தான் அது இயல்பாகி விட்டது என்பான் எஸ்.கே. இது தான்தோன்றித் தனமாகத் தெரியலாம். இந்தத் தான்தோன்றித்தனத்தைக் கடைபிடிப்பது கடைபிடித்துப் பார்த்தால்தான் தெரியும் எவ்வளவு சிரமம் என்பது.
            இதே தன்மைதான் அவனது எழுத்திலும் பிரதிபலிக்கிறது. அதை நீங்களே பாருங்கள் -
            "இனி எனக்குத் தோன்றுவதை மட்டுமே எழுதப் போகிறேன். என் அனுபவங்கள், என் சிந்தனைகள் என்னவோ அது மட்டுந்தான் என் எழுத்து. எந்தப் பத்திரிகையின் பிரசுர கட்டகத்துள் சிக்கிக் கொண்டு அதற்குத் தகுந்தாற் போல் செக்கு மாட்டுச் சுற்றின் எண்ணெய் பிழிய ஆசையில்லை. இனி எனக்குப் பிரசுரம் ஆக வேண்டியது ஒன்றுமில்லை. பிரசுரம் ஆகி மகிழ வேண்டிய அவசியமும் இல்லை. என்னைப் பொருத்த வரையில் இனி எல்லாம் நடந்தாலும் ஒன்றுதான், நடக்காவிட்டாலும் ஒன்றுதான்."
            இப்படியாக எஸ்.கே.வின் எழுத்து வணிகச் சமாச்சாரங்கள் இல்லாத ஒன்றாகி விட்டது. கடை விரித்தேன் கொள்வாரில்லை என்று எஸ்.கே. ஒரு நாளும் புலம்பியதில்லை. அவன் விற்பதெல்லாம் யாராலும் வாங்க முடியாதவைகள் என்பது அவனுக்குத் தெரியும். ஏதோ சில பேர் அவனது எழுத்தைப் படிக்கிறார்கள். அவர்களுக்குத் தெரியும் விலை மதிக்க முடியாத பொக்கிஷங்கள் எளிமையானவை என்றும் அவைகளை விலை கொடுத்து வாங்கி விட முடியாது என்பதும்.

*****

No comments:

Post a Comment

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா?

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா? விடிவதற்குள் ஒரு இரவில் நான்கு கோடி பாடல்களைப் பாடும் வல்லமை உள்ளவர்கள் நாட்டில் உள்ளார்களா எனச் சவ...