1 Jan 2018

தபால்காரர் தந்துப் போவார்!

தபால்காரர் தந்துப் போவார்!
திருமண அழைப்பிதழோ
விவாகரத்து நோட்டிஸோ
வங்கிக் கணக்கு விவரமோ
நகை ஏல அறிவிப்போ
கருமாதி பத்திரிகையோ
காணாமல் போனவர் எழுதிய கடிதமோ
தபால்காரர் கொடுத்து விட்டுச் செல்வார்
துக்கமோ
சந்தோசமோ
வாங்கி வந்து
உள்ளே பிரித்துப் பார்த்து
அழுது கொள்ள வேண்டியதுதான்
சிரித்துக் கொள்ள வேண்டியதுதான்

*****

No comments:

Post a Comment

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா?

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா? விடிவதற்குள் ஒரு இரவில் நான்கு கோடி பாடல்களைப் பாடும் வல்லமை உள்ளவர்கள் நாட்டில் உள்ளார்களா எனச் சவ...