3 Dec 2017

கனமழை எத்தனை கிலோ?!

கனமழை எத்தனை கிலோ?!
            நாளிதழ் வாசிக்கும் பழக்கம் உள்ளவன் எஸ்.கே. அதுவும் ஒரு குறிப்பிட்ட நாளிதழ்தான். அதில் என்ன பிரச்சனை என்கிறீர்களா? பிரச்சனை அதில் இல்லை.
            அவன் வீட்டுக்கு நாளிதழ் போடுபவருக்கும், அந்தக் குறிப்பிட்ட நாளிதழின் முகவருக்கும் இடையில் ஏற்பட்ட சண்டையில், நாளிதழ் போடுபவர் வேறு நாளிதழை மாற்றி விட்டார்.
            எஸ்.கே.வுக்கு புதிய நாளிதழ் பிடிக்கவில்லை. கண்ணைக் கவரும் அம்சங்கள் இல்லாத நாளிதழ் அது. "என்னைக் கவரும் அம்சங்கள் எதுவுமில்லை!" என்று புலம்ப ஆரம்பித்து விட்டான் எஸ்.கே.
            குறைந்தபட்சம் சிந்திக்கக் கூட தூண்டவில்லை என்பது அந்த நாளிதழ் குறித்து எஸ்.கே.வின் குற்றச்சாட்டு. அந்த நாளிதழ் எதையும் கேள்வி கேட்கவில்லை என்பது எஸ்.கே.வின் மற்றொரு குற்றச்சாட்டு. இப்படி உள்ள நாளிதழ் எப்படி ஒரு நல்ல நாளிதழ் ஆகும் என்பது எஸ்.கே.வின் மனதைக் குடையும் கேள்வி.
            தான் விரும்பியபடி நாளிதழ் இருக்க வேண்டும் என்பதில் மிகுந்த பிடிவாதம் உள்ள எஸ்.கே. தன் வீட்டுக்கு வரும் தான் விரும்பாத நாளிதழைப் படித்து, தனக்குப் பிடித்த மாதிரி கேள்விகளெல்லாம் கேட்டு, சுவாரசியங்களெல்லாம் சேர்த்து தாளில் எழுதி வைத்துக் கொண்டு அதையே நாளிதழாக வாசித்துக் கொள்கிறான்.
            சான்றாக ஒன்று, "தமிழகத்தில் கனமழை என்கிறார்கள்! எத்தனை கிலோ என்ற தகவல் வெளியாவதே இல்லை!"

*****

No comments:

Post a Comment

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை!

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை! மனிதர்களும் விலங்குகளும் குறிப்பிட்ட காலம் வரை வளர்கின்றனர். தாவரங்கள் அப்படியல்ல. ஆயுள் ம...