18 Dec 2017

முடியாத பொழுதுகளின் பரவசம்

முடியாத பொழுதுகளின் பரவசம்
முடியும் என்பதைப் போல
முடியாது என்பதும் அழகாவது
படைப்பில் மட்டும் சாத்தியம்
உன் அழகெனும் திமிர் கொண்டு
முடியாது என்று சொல்லும்
உன் சொல்லும் ஒரு மோட்சம்
முடியாது என்று சொன்ன போது
நீ உன்னில் இருந்தாய்
அதை முழுமையாய் ஏற்றுக் கொண்ட போது
நான் என்னில் இருந்தேன்
முடியாது என்று சொல்லும்
அந்த சோம்பல் பொழுதின் சுகம் எனக்கு
முடியும் என்று அந்த வாய்ப்பில்
உற்சாகமாய் எழும் ஒருவனின்
நம்பிக்கைக் கீற்றின் வெளிச்சம் உலகுக்கு
உங்களுக்குப் புரியாது
முடியாது என்று சொல்லும் பொழுதுகளில்
திருப்தியோடு இருக்க முடிகிறது எனக்கு
இந்த அதிசயத்தை அவ்வளவு எளிதில்
புரிந்து கொள்ள முடியாது உங்களால்.

*****

No comments:

Post a Comment

இருக்கும் போதும்… இல்லாத போதும்…

இருக்கும் போதும்… இல்லாத போதும்… சம்பாதிக்கும் காலத்தில் ஆயிரம் ரெண்டாயிரம் என்று கடன் கொடுக்க ஆயிரம் பேர் ஐயா கடன் வேண்டுமா என்று அ...