18 Dec 2017

திணை மயக்கம்

திணை மயக்கம்
ஆற்றுக்கு அந்தப் புறம்
அக்கரையில்
நெருஞ்சி முற்கள் இடற
எடுத்து விட்டு எடுத்து விட்டு
நடந்த நாட்கள்
ஞாபகங்களைக நறுக்கென்று குத்துகிறது
இப்போது
வற்றிக் கிடக்கும் ஆற்றுக் கரையோரம்
கருகிக் கிடக்கும் முட்செடிகளைப்
பழித்துக் கொண்டு
காலணி இல்லாமல் நடக்கும் பாதங்களை
கரையெங்கும் குவார்ட்டர் பாட்டில் உடைசல்கள்
பதம் பார்க்கிறது.
முன்னொரு காலம்
கரும்புக் காடாய்
வாய்க்கால் வரப்பு மதுவாங் கட்டை
நரிகள் ஊளையிட்ட இடமெல்லாம்
போதை  உளறல்கள் நிரம்பிப் பெருக்கெடுத்து
பொங்கிப் பிரவாகமாகி
வாய்க்கால் வழி வழிந்து கொண்டிருக்க
வரப்புகள் மேல் எங்கும்
வாட்டர் பாக்கெட் உறைகள் முளைத்திருக்க
மதுவாங்க் கட்டைகள் எங்கும்
சிதறிக் கிடக்கும் சைடீஸ்களைக்
கொத்திக் கொண்டு போகின்றன
கருப்பழிந்து உடல் வெளுத்து
வற்றிப் போனக் காக்கைகள்

*****

No comments:

Post a Comment

விவசாயம் செய்தால் மன அழுத்தம் போய் விடுமா?

விவசாயம் செய்தால் மன அழுத்தம் போய் விடுமா? பொறியாளர்கள் பலரும் மன அழுத்தம் காரணமாக விவசாயம் நோக்கி வருவதாக வெளியாகும் செய்திகளைப் பார்க்கி...