13 Dec 2017

சேகரிப்புகள்

சேகரிப்புகள்
என்றோ கூந்தலிலிருந்து
விழுந்த மல்லிகை
வெடித்துச் சிதறிய நட்சத்திரங்கள் போல
வளையல் துண்டுகள்
உதிர்ந்து விட்ட இலை போல
தின்று போட்ட சாக்லேட் உறைகள்
நிழல் போல் சுற்றும்
பேஸ்புக் பதிவுகள்
பேய் போல் உலாவும்
வாட்ஸ்அப் பகிர்வுகள் என
உன் சேகரிப்பில் நிறைய.
என் சேகரிப்பில் எதுவுமில்லை
உனக்கான என் எளிய அன்பைத் தவிர.

*****

No comments:

Post a Comment

அன்புக்கு உள்ளேயும் அன்புக்கு அப்பாலும்

அன்பைப் புரிந்து கொள்ளும் அசாத்தியம்! அன்புக்காகத் துயருறுவதும் அன்பே துயருறுவதைப் பார்க்க ஏலாது யாருக்குப் பிடிக்கும் துயருற துயரைச...