12 Dec 2017

மறுபடியும் மெய்ப்பிக்கிறார் மார்க்ஸ்!

மறுபடியும் மெய்ப்பிக்கிறார் மார்க்ஸ்!
            மாற்றம் ஒன்றே மாறாதது என்றார் மார்க்ஸ்.
            அரசியலில் நிரந்தர எதிரியும் இல்லை, நிரந்தர நண்பனும் இல்லை என்றார் என்று யாரைச் சொல்வது என்று தெரியவில்லை.
            ஓடமும் வண்டியில் ஏறும், வண்டியும் ஓடத்தில் ஏறும் என்பார்கள் நம் முன்னோர்கள்.
            இன்றைக்கு நண்பனாய் இருப்பவன் நாளைக்கு எதிரியாவதும், நேற்றுக்குப் பகைவனாய் இருந்தவன் இன்றைக்கு நண்பனாய் ஆவதும் சகஜம் போலும்.
            வாழ்க்கை ஒரு வட்டம். யார் எங்கு நிற்பார்கள்? எப்படி நிற்பார்கள்? என்பதெல்லாம் புரியாத கணக்கு என்பார்கள் அனுபவப்பட்டவர்கள்.
            காட்சிகள் இவ்வளவு சீக்கிரம் மாறும் என்பதெல்லாம், நிலைமை எப்போது வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் மாறும் என்பதெல்லாம் நாசாவாலே கண்டுபிடிக்க முடியாத அதிசயமாக இருக்கும் போலிருக்கிறது.
            இது எட்டாவது அதிசயமோ, எட்டாத அதிசயமோ? ஆர்.கே.நகர் தேர்தலுக்கே அது வெளிச்சம்.
            கட்சிக்காக எல்லாம் பகைச்சுக்காதீங்க மக்கா. அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா என்று கவுண்டமணி சொன்னதை எந்த அரசியல் ஞானியும் இதுவரை சொன்னதில்லை. அவரே அரசியலுக்கு வரவில்லை. வந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். ஒரு பெட்டி இங்க இருக்கு, இன்னொரு பெட்டி எங்க இருக்கு? என்று செம கலாய் ஆயிருக்கும்லா!

*****

No comments:

Post a Comment

அன்புக்கு உள்ளேயும் அன்புக்கு அப்பாலும்

அன்பைப் புரிந்து கொள்ளும் அசாத்தியம்! அன்புக்காகத் துயருறுவதும் அன்பே துயருறுவதைப் பார்க்க ஏலாது யாருக்குப் பிடிக்கும் துயருற துயரைச...