23 Dec 2017

அந்த நாலு விசயங்கள்!

அந்த நாலு விசயங்கள்!
            1) முதலில் நடந்த இடைத்தேர்தலில் டி.டி.வி.டி.யை நிறுத்தி எம்.எஸ்.எதிர்க்கப்படுகிறார். பிறகு நடக்கும் அதே இடைத்தேர்தலில் எம்.எஸ்.‍ஸை நிறுத்தி டி.டி.வி.டி. எதிர்க்கப்படுகிறார். இதை எப்படியப்பு புரிந்து கொள்வது? மண்டை வெடித்து விடுவது போலிருப்பதாக பலரிடமிருந்து வந்து கொண்டிருக்கும் தகவலுக்கு என்ன பதில் சொல்வதப்பு?
            2) யாத்தே! யப்பே! இந்தக் காக்கிச் சட்டக்காரவுகள களவாணிகள பிடிக்கிறேன்ங்ற பேர்ல வெளிமாநிலங்களுக்கெல்லாம் அனுப்பாதீகப்பு. களவாணிக இவுகள சுடுகிறாகளோ இல்லியோ, இவுகளே ஒருத்தருக்கொருத்தர் சுட்டுக்கினு செத்துடுவாகப் போலிருக்கு.
            3) பொதுவாக எல்லார்க்கும் மனசாட்சி இருக்கிறது. ஓட்டுக்குப் பத்தாயிரமெல்லாம் கொடுத்தால்... வாங்கிக் கொண்டு மனசாட்சிப்படி ஓட்டுப்  போடு என்றால் எப்படி? சர்தான்... என்னதான் பண்ணுவது? இடைத்தேர்தல் நடக்கும் தொகுதிகளில் மட்டுமாவது டீ மானிடைசேஷன் பண்ணுங்கப்பு!
            4) கொஞ்ச நாளாவே ஒரு டவுட்டு! ரெண்டாயிரம் ரூவா நோட்டு ரிசர்வ் பேங்க் அச்சடிக்கிறாங்களா? இல்ல, ஆர்.கே.நகர் தொகுதி வேட்பாளர்கள் அச்சடிக்கிறாங்களா? அது சரி! ஆர்.கே. நகர்ல இப்படி நோட்டு தூள் பறப்பது ஓ.கே.ன்னு ஒரு பேச்சு வெச்சுகிட்டாலும், ஓகி புயலால் பாதிக்கப்பட்ட கன்னியாகுமரிக்கு நிவாரணத் தொகைக் கூட வழங்கப்படவில்லையேயப்பு! இடைத்தேர்தலை அங்க வெச்சு இருக்கணுமப்பு.

*****

No comments:

Post a Comment

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை!

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை! மனிதர்களும் விலங்குகளும் குறிப்பிட்ட காலம் வரை வளர்கின்றனர். தாவரங்கள் அப்படியல்ல. ஆயுள் ம...