19 Dec 2017

அவரின் இருப்பு

அவரின் இருப்பு
‍அவர் அறவே டி.வி.பார்ப்பதில்லை
செல்பேசி பயன்படுத்துவதில்லை
யாராவது எப்போதாவது கொடுத்து
பேசச் சொல்கிற போது
தொட்டுப் பார்ப்பதோடு சரி
பேஸ்புக், வாட்ஸ்அப், டிவிட்டர் என்று
ஏதாவது ஒன்றில் அவர் இருக்கலாம் என்கிறார்கள்
இருக்கலாம்தான்
இருப்பு என்பது பிடிக்காதவர்கள்
எதில் இருப்பார்கள்?
இந்த ஊரின் காரியங்களின் ஒன்றில்
எப்போதும் இருக்கிறார்
எஞ்சிய நேரங்களில்
விதை ஒன்று முளை விடும் பொழுதிற்காக
காத்துக் கொண்டிருக்கிறார்
அவரின் மறைவிற்குப் பின்
அவருடைய சிலையை
டி.வி.யில் காட்டினார்கள்
பேஸ்புக், வாட்ஸ்அப்பில், டிவிட்டரில்
அதை ப்ரோபைல் படமாக்கினார்கள்
அநேகர்களின் செல்பேசிகளில்
அவரது படமே திரையில் உள்ளது.

*****

No comments:

Post a Comment

மூன்று லட்சியங்கள்! (சிறுகதை) - விகடபாரதி

மூன்று லட்சியங்கள்! (சிறுகதை) -          விகடபாரதி போக்குவரத்தில் நீந்தி வருவது சாகசம். சில நேரங்களில் எதிர்நீச்சல் போடுவது போல இருக்கிற...