19 Dec 2017

தலைவர்களைக் காக்கும் தலைவர் தேவை!

தலைவர்களைக் காக்கும் தலைவர் தேவை!
            முன்னோர்கள் சொன்ன பழமொழியை எண்ணி வியக்காமல் இருக்க முடியுமா? 'மடியில் கனமில்லை என்றால் வழியில் பயமில்லை' என்றார்கள் முன்னோர்கள்.
            அவர்கள் வழி என்று சொன்னது பாதையையா? காலத்தை. வழி என்பது காலமே. வருங்காலமே நமக்கு வழியாகிறது. வருங்காலத்தில் என்ன நடக்குமோ என்ற பயமே நம்மை ஆட்டிப் படைக்கிறது. அந்தப் பயத்திற்கு ஏற்பவே அடக்கி வாசிக்கிறோம்.
            ரெய்டுக்குப் பயப்படும் அப்ரெண்டிஸ் தலைவர்களால் நிரம்பி வழிந்து கொண்டிருக்கிறது நம் தமிழ்நாடு. அட அப்ரெண்டிஸ்களா!
            சாமான்யர் மனதில் எழும் சாதாரண ஓர் எளிய எதிர்ப்பைப் பதிவு செய்து கூடப் பயப்படுகிறார்களே இந்தத் தலைவர்கள். பதிவு செய்தால் நாளைக்கே ரெய்டு வருமோ என்ற அச்சம் அவர்களை ஆட்டிப் படைக்கிறதே.
            தவறான வழியில் போய்க் கொண்டு இருப்பவர்கள் தவறுகளை எப்படிக் கண்டிக்க முடியும்?
            குரல் கொடுக்க வேண்டியவரே குற்றம்செய்திருந்தால் எப்படி குரல் கொடுக்க முடியும்?
            முன்னோர்கள் சொன்ன பழமொழியை இதனால்தான் எண்ணி எண்ணி வியக்க வேண்டியதாக இருக்கிறது. 'மடியில் கனமிருந்தால் வழியில் பயமிருக்கும்!"
            அதற்காக அதைக் காரணமாக வைத்து ரெய்டு என்ற பெயரில் ப்ளாக்மெயில் செய்து ஆட்டிப் படைப்பது எந்த வகையில் நியாயமாக இருக்க முடியும்?
            ரெய்டைச் செய்யுங்கள். நடவடிக்கை எடுங்கள். என்ன தண்டனை கொடுக்க வேண்டுமோ கொடுங்கள். தலைவர்களைப் பொம்மைகளாக ஆட்டி வைக்கத்தான் இந்த ரெய்டுகள் என்றால், குரங்காட்டியிடம் மாட்டிக் கொண்டு குரங்குகளாகி விட்ட இந்தத் தலைவர்களைக் காக்க ஒரு தலைவர் தேவை என்பதுதான் தமிழகத்தின் இப்போதைய முதல் தேவை.
            அவசரமா தமிழகத்துக்குச் சூடா, ஸ்ட்ராங்க ஒரு தலைவர் பார்சேல்! வேறென்ன சொல்ல...?

*****

No comments:

Post a Comment

மூன்று லட்சியங்கள்! (சிறுகதை) - விகடபாரதி

மூன்று லட்சியங்கள்! (சிறுகதை) -          விகடபாரதி போக்குவரத்தில் நீந்தி வருவது சாகசம். சில நேரங்களில் எதிர்நீச்சல் போடுவது போல இருக்கிற...