19 Dec 2017

சோம்பலின் கணங்கள்

சோம்பலின் கணங்கள்
நான் மிக நீண்ட நேரம் சோம்பலாக இருந்தேன்
உன் கண்களின் தீட்சண்யத்தால் சுறுசுறுப்பாக ஆனேன்
உலகம் என்னை தூக்கி வைத்துக் கொண்டாடியது
பிறகு நீ சென்று விட்டாய்
நான் மீண்டும் சோம்பலில் ஆழ்ந்தேன்
இப்போது உலகுக்கு என்னைத் தெரியவில்லை
அடிக்கடி உன் கண்களை நினைத்துக் கொள்வேன்
உள்ளுக்குள் உற்சாகம் இருக்கிறது
உடம்புக்கு அது தேவையில்லை
இந்த உலகுக்கு அது புரிவதில்லை
*****

No comments:

Post a Comment

மூன்று லட்சியங்கள்! (சிறுகதை) - விகடபாரதி

மூன்று லட்சியங்கள்! (சிறுகதை) -          விகடபாரதி போக்குவரத்தில் நீந்தி வருவது சாகசம். சில நேரங்களில் எதிர்நீச்சல் போடுவது போல இருக்கிற...