16 Dec 2017

வாழ்வை ஏமாற்றாதவர்கள்

வாழ்வை ஏமாற்றாதவர்கள்
வார்த்தைகள் அநேகமாக அதிகம்
பேசிப் பேசியே வார்த்தைகள்
நம்மைப் பிரிவில் தள்ளின
மேலும் மேலும் பேசிய வார்த்தைகள்
பிரிவை இன்னும் ஆழமாக்கின
மெளனமாக இருந்திருந்தால்
இணைந்து இருந்திருந்திருக்கலாமோ என்று
சில நேரங்களில் தோன்றுவதுண்டு
மறுநொடியே பேசத் தொடங்கி விடும்
மனதைப் பார்க்கையில்
சாத்தியமில்லை என்று புரியவரும்
பேசிப் பிரிந்ததன் மூலம்
உன்னை நீயோ
என்னை நானோ
ஏமாற்றவில்லை
மெளனமாக இணைந்து வாழ்ந்திருந்தால்
வாழ்வை ஏமாற்றியிருப்போம் நாம்.

*****

No comments:

Post a Comment

விவசாயம் செய்தால் மன அழுத்தம் போய் விடுமா?

விவசாயம் செய்தால் மன அழுத்தம் போய் விடுமா? பொறியாளர்கள் பலரும் மன அழுத்தம் காரணமாக விவசாயம் நோக்கி வருவதாக வெளியாகும் செய்திகளைப் பார்க்கி...