16 Dec 2017

அது அதுவாக பிரபஞ்சம் தீண்டுகையில்...

அது அதுவாக பிரபஞ்சம் தீண்டுகையில்...
கோபம்தான் அதன் மூலம்
கோபத்திலிருந்து பிறப்பதுதான் அது
நீங்கள் கோபப்படாமல் இருந்திருந்தால்
உணர்ச்சிவசப்பட்டிருக்க மாட்டீர்கள்,
சிக்கலான மனநிலைக்கு ஆட்பட்டிருக்க மாட்டீர்கள்,
அந்த ஒரு நொடிப் பொழுது
மொத்த வாழ்க்கையையும் புரட்டிப் போட்டிருக்காது,
இவ்வளவு இழப்புகளைச் சந்தித்திருக்க மாட்டீர்கள்,
அது அதுவாக இருந்திருக்கும்
நீங்கள் நீங்களாக இருந்திருப்பீர்கள்
இன்று நீங்கள்
குருவிகள் கத்துவதைப் பிரபஞ்ச கானமாக
பட்டாம் பூச்சிகள் பறப்பதைப் பிரபஞ்ச அதிசயமாக
மென்காற்றின் தீண்டலை பிரபஞ்ச தொடுதலாக
ரசித்துக் கொண்டிருப்பீர்கள்!

*****

No comments:

Post a Comment

விவசாயம் செய்தால் மன அழுத்தம் போய் விடுமா?

விவசாயம் செய்தால் மன அழுத்தம் போய் விடுமா? பொறியாளர்கள் பலரும் மன அழுத்தம் காரணமாக விவசாயம் நோக்கி வருவதாக வெளியாகும் செய்திகளைப் பார்க்கி...