22 Dec 2017

பணியும் பணி நிமித்தமும்

பணியும் பணி நிமித்தமும்
மண்ணுக்குள் போகாமல் இருந்தால்
வேர்களும் இலை விரிக்கும்
மண்ணுக்கு மேலே போகாமல் இருந்தால்
கிளைகளும் நீர் உறிஞ்சும்
இருக்கும் இடத்தைப் பொருத்தே
வேர் என்பதும்
கிளை என்பதும்
அவைகளின் பணி என்பதும்
நான் பாமரன் என்பதும்
நீ பணக்காரன் என்பதும்

*****

No comments:

Post a Comment