15 Dec 2017

சூட்சமச் சொல்லாடல்கள்

சூட்சமச் சொல்லாடல்கள்
து இருந்து கொண்டுதான் வந்திருக்கிறது
மறுத்தலித்துக் கொண்டு வந்திருக்கிறோம்
அன்பா அது எனக் கேட்காதே
வக்கிரம் என்றும் சொல்லலாம்
சங்கடப்படுவாய் என
சொல்லாமல் போவதற்குப் பெயர் பயமா என்ன?
உனது நாகரிகத்தின் உச்சியில்
தூக்கில் தொங்குவாய் என
சூசகமாக சொல்வேன் என எதிர்பார்க்காதே
நிசமாகவே சொல்கிறேன்
எப்படி நடக்கும் என்று எனக்கும் தெரியாது
அது அப்படியே நடக்கிறது என்று
அனுபவப்பட்டவர்கள் சொல்கிறார்கள்
உன் வாயால் சொல் என்று இனியும் உளராதே
அதைச் சொல்வதற்கு நான் எதற்கு
நீ உணர விரும்பாத போது

*****

No comments:

Post a Comment

கொடுப்பதில் இருக்கும் சூட்சமம் – ஓளவை கூறும் ஈகை மொழி!

கொடுப்பதில் இருக்கும் சூட்சமம் – ஓளவை கூறும் ஈகை மொழி! கொடுப்பதென்றால் இப்போதே கொடுத்து விட வேண்டும். நாளை என்று நாள் கடத்தக் கூடாது. நா...