7 Dec 2017

சிறையைப் பெயர்த்து பறத்தல்

சிறையைப் பெயர்த்து பறத்தல்
எனக்குப் பைத்தியம் பிடிப்பது போலிருந்த நாட்களில்
நான் எழுதுவதைக் குறைத்திருந்தேன்
வாசிப்பு சுத்தமாக இல்லை
சக மனிதனிடம் பேசிப் பேசிச் சோர்வுற்று
களைத்து இருந்தேன்
இனி ஒரு அடியும் நகர முடியாது
என்றிருந்த நிலையில்
எழுதத் தொடங்கினேன்
வழியத் தொடங்கியது பைத்தியகாரத்தனம்
வாசிக்கத் தொடங்கினேன்
உடலில் ஊர்ந்த புழுக்களும் பூச்சிகளும்
புத்தகத்தின் பக்கங்களில் இடமாறி
நெளியத் தொடங்கின
சிறையைப் பெயர்த்துக் கொண்டு
சிறையோடு பறப்பது போலிருந்தது
என் சிறைச்சாலையை இனி
யாருக்கும் தருவதாக இல்லை

*****

No comments:

Post a Comment