21 Dec 2017

மகளோடு பேசும் அதிசயம்

மகளோடு பேசும் அதிசயம்
இனி என் மகளுக்கு
தேவதைக் கதைகள் கூற முடியாது
அந்த இடத்தை சுட்டிச் சேனல்கள்
பிடித்துக் கொண்டு விட்டன
இனி என் மகளோடு
கண்ணாமூச்சி விளையாட முடியாது
அந்த இடத்தை
மொபைல் கேம்கள் பிடித்து விட்டன
இனி என் மகளோடு
பிரியமாய் ரெண்டு வார்த்தைகள்
உரையாட முடியாது
சமூக வலைதளங்களின் பிரியங்களில்
அவள் வாழ்ந்து கொண்டிருக்கிறாள்
அவள் பூமிக்கு இறங்கி வரும் நாளில்
நாங்கள் இருவரும் கதைக்கும் உரையாடலை
அதிசயமாகக் கொண்டாடி
செய்திச் சேனல்கள்
நேரடி ஒளிபரப்பு செய்யலாம்.

*****

No comments:

Post a Comment

அனுபவங்களின் பின் நிற்கும் முடிவுகள்

அனுபவங்களின் பின் நிற்கும் முடிவுகள் ஏதோ ஒன்றைத் தேட தேடுவது கிடைக்கவில்லை என்பதைத் தவிர வேறொன்றும் பிரச்சனையில்லை இவ்வளவுதான் இப்பட...