2 Dec 2017

தொடர்ந்து ஓட நிறுத்தி நிறுத்தி ஓடுங்கள்!

தொடர்ந்து ஓட நிறுத்தி நிறுத்தி ஓடுங்கள்!
            எஸ்.கே.(தமிழ் எழுத்தாளன்!) கொஞ்சம் ஓய்வெடுத்தப் பிறகுதான் அவன் மனம் சற்று சமநிலைப்பட்டுள்ளது. அந்த அளவுக்கு வேலை சார்ந்த மன அழுத்தத்தால் அவன் பாதிக்கப்பட்டு இருந்திருக்கிறான். ஓய்வுதான் மனதினை, உடலினை மீட்டுக் கொண்டு வரும் மருந்து என்பதை அவன் உணருகிறான்.
            ஓய்வெடுக்கும் போதுதான் இயல்பு நிலை திரும்புகிறது. இயல்பு நிலையிலிருந்து விலகிய நிலையே அசாதாரண நிலையாக உடலிலோ, மனதிலோ நோயாக உண்டாகிறது. அசாதாரண நிலையிலிருந்து விலக ஓய்வு நிலையையே நாட வேண்டியிருக்கிறது.
            ஓய்வுக்கு ஓடும் நோய்கள் ஏராளம் என்பதை எண்ணிப் பார்க்கும் போது மாத்திரை கொண்டு ஓட்டிய நோய்களை எண்ணிப் பார்க்கிறான் எஸ்.கே. மாத்திரை வியாபாரத்திற்கு உலகம் ஓய்வு கொள்ள முடியாத வேகத்தில் பரபரப்பாக இருக்க வேண்டும். அப்படித்தானே இருக்கிறது. இப்போது சற்று ஓய்வு கொண்ட பிறகு சற்று இயல்பான நிலையை அவனால் உணர முடிகிறது.
            ஒரு நாள் நல்ல ஓய்வில் இருந்தது இப்போது மறுநாள் சிந்தையில் ஒரு தெளிவை உருவாக்கியுள்ளது எஸ்.கே.வுக்கு.
            டார்கெட் டார்கெட் என்று ஓடும் ஐ.டி. துறையில் பணியாற்றுபவர்களுக்கு ஏற்படும் மன இறுக்கத்திற்கு நிகரானது எஸ்.கே.வுக்கு ஏற்பட்ட இப்பிரச்சனை. அவனும் அப்படித்தான் டார்கெட் என்று நிறைய வைத்துக் கொண்டு அதை அந்தக் குறிப்பிட்ட நாளில் நிறைவேற்றிட வேண்டும் என்று ஓடிக் கொண்டு இருந்தான்.
            ஐ.டி. துறை என்றில்லை, இன்று அனைத்துத் துறைகளும் இது போன்ற வேலை சார்ந்த மனஅழுத்தம் தரும் துறைகளாக மாறி விட்டன. உடலுக்கு ஏதாவது செய்தால் மட்டும்தான் விடுப்பு ஓய்வு எடுக்க வேண்டும் என்ற நிலையை மாற்றி மனதுக்கு ஏதாவது செய்தாலும் விடுப்பு ஓய்வு எடுப்பதை எஸ்.கே. தன் அனுபவத்தின் மூலம் அனைவருக்கும் பரிந்துரைக்க விரும்புகிறான்.
            தொடர்ந்து ஓடுவதற்கு அவ்வபோது ஓட்டத்தையும் நிறுத்த வேண்டும். நிறுத்தி நிறுத்தி ஒடுவதுதான் நல்லது.

*****

No comments:

Post a Comment

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை!

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை! மனிதர்களும் விலங்குகளும் குறிப்பிட்ட காலம் வரை வளர்கின்றனர். தாவரங்கள் அப்படியல்ல. ஆயுள் ம...