2 Dec 2017

இருக்கைப் பிடி

இருக்கைப் பிடி
கைக் குழந்தையுடன் பேருந்தேறியவளின் கண்கள்
ஸ்டியரிங்கைப் போல் சுழல்கிறது
இடம் பிடித்து அமர்ந்தவர்கள்
இடம் கொடுக்க இயலாத மனநிலையில்
அவஸ்தையில் நெளிகிறார்கள்
அவரவர்க்கு அவரவர் களைப்பு
அவரவர்க்கு அவரவர் இடம் என்ற சுயநலம்
இறங்கும் வரை இதே நிலைதான்
என்றவள் நினைக்கும் வேளையில்
இருக்கையிலிருந்து ஒருத்தி எழுந்திருக்கிறாள்
பக்கத்தில் நின்ற இருந்த ஒருத்தி
பாய்ந்து வந்து இடம் பிடிக்கிறாள்
மாரில் தன் சிறு குழந்தையைத்
தாய்மையோடு சுமப்பது போலிருக்கிறது
இருக்கையில் வந்து அமர்ந்தவளை
அவள் பார்க்கும் பார்வை.

*****

No comments:

Post a Comment

மனித மிருகத்துக்கான பல்லுயிர் பாடம்

மனித மிருகத்துக்கான பல்லுயிர் பாடம் ஆயிரக்கணக்கான விதைகளை அனுப்பிக் கொண்டிருக்கும் மரம் அத்தனை விதைகளும் முளைக்க வேண்டும் என்றா ஆசைப...