11 Dec 2017

அழித்தால் முடியுமோ?!

அழித்தால் முடியுமோ?!
காட்டை அழித்தால் பூமியைக் காக்க முடியுமோ?
மலையை அழிதால் பூமியைக் காக்க முடியுமோ?
ஆற்றை அழித்தால் பூமியைக் காக்க முடியுமோ?
கடலை அழித்தால் பூமியைக் காக்க முடியுமோ?
முடியுமோ முடியாதோ
இந்த மனுசப் பயலை அழித்தால்
பூமியைச் சேமமாய்க் காக்க முடியும்.

*****

2 comments:

  1. ஐயா! ஏனிந்த கோபம்! மனிதனை அழிக்க வேண்டியதில்லை, மனிதன் மனதில் இருக்கும் பேராசையை, இந்தப் பூமி தனக்கானது என்று என்னும் அவனது எண்ணத்தை, எதையும் காசாக்கும் பொருளாகப் பார்க்கும் அவனது தீய குணத்தை அழித்தால் போதும், இப்புவி நலமாய் உய்யும்!

    ReplyDelete
    Replies
    1. அன்பெனும் அங்குசம் பட்டாவது அடங்கட்டும்!
      ----------------------------------------------
      மனித குலத்தை நேசிக்கச் சொல்வதே கவிதை. கவிதையின் இலக்கணமாக 'மனித நேசத்தைச் சொல்வதே கவிதை' என்று வரையறுப்பதும் பிழையாகாது.
      மனித குலத்தை நேசிக்க மனித குலம் பூமியில் இருக்க வேண்டும் அல்லவா! மனித குலமே இல்லாத பூமியில் மனித குலத்தை நேசிக்க யார் இருப்பார்கள்?
      காட்டை, மலையை, கடலை, ஆற்றை அழித்தப் பிறகு மனித குலம் என்றில்லை உயிர்கள் வாழவே தகுதியற்ற கிரகங்களில் ஒன்றாக மாறி விடாமல் இருந்து விடுமா பூமி?
      மனிதப் பரிணாம மாற்றத்திற்கு முன் பூமியில் இருந்த உயிரினங்களின் எண்ணிக்கையும், மனிதப் பரிணாம மாற்றத்திற்கு பின்னிருந்த எண்ணிக்கையும் அதிகரித்திருக்க இருக்க வாய்ப்பில்லை. குறைந்தபட்சம் சமமாக இருந்திருக்கவும் வாய்ப்பில்லை. குறைவுக்கான வாய்ப்புகளே அதிகம்.
      பிற உயிர்களை வேட்டையாடி, தன்னைத் தானே வேட்டையாடி ஆசை தீராது இயற்கையின் மீதான வேட்டையாடலின் உக்கிரத்திற்கு வந்து விட்டான் மனுசப் பயல்.
      மனுசப் பயல் என்ற வார்த்தை அந்தச் சிறுமைத் தனத்தைத்தான் நேரிடையாக இல்லாமல், காட்டை, ஆற்றை, கடலை அழித்த மனுஷப் பயலை நைச்சியமாகச் சுட்டுகிறது.
      கவிதையின் தொடர்ச்சியாகப் பார்க்குமிடத்து இந்த மனுசப் பயல் வெறும் மனுசப் பயல் மட்டுல்லன். காட்டை, கடலை, ஆற்றை அழித்தவன். அழித்தவன் அழியாமல் வாழ்வானோ?
      முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் என்பது நிச்சயிக்கப்பட்டது போல, அது ஒரு நிச்சயம். அழித்தவன் அழிபடுவான்.
      ஆயினும் கத்திக்கு கத்திதான் தீர்வா? துப்பாக்கிக்குத் துப்பாக்கிதான் தீர்வா? அழிவுக்கு அழிவுதான் தீர்வா?
      கவிதை கொஞ்சம் அதிமாகவே அறம் பாடி விட்டது. அறத்தைப் பாடுவதுதான் கவிதையின் முக்கிய நோக்கம் என்றாலும் என்றாலும், அதை விட அதிகமாக அன்பைப் பாடுவதே அதிமுக்கிய நோக்கம்.
      இந்த அறம் பாடுதலுக்குள்ளும் ஓர் அன்பு இருக்குமோ?
      அறத்திற்கே அன்புசார்பு என்ப அறியார்
      மறத்திற்கும் அஃதே துணை
      என்பாரே வள்ளுவர். இராமமூர்த்தியாரும் அஃ‍தையே சொல்கிறார். கவிஞனையும் தாண்டி வடிவம் கொள்ளும் கவிதையை என்னதான் செய்வது?! அன்பெனும் அங்குசம் பட்டாவது அடங்கட்டும் மதம் கொண்ட கவிதை.
      *****

      Delete

அரிசி எந்தக் கடையில் விளைகிறது?

அரிசி எந்தக் கடையில் விளைகிறது? காளையரின் வியர்வை சிந்தி காளைகளின் சாணமும் கோமியமும் விழ ஏர் உழுத நிலத்தை டிராக்டர் கார்பன் புகை உமி...