4 Dec 2017

அதனால் என்னவென்றால்...?!

அதனால் என்னவென்றால்...?!
            எல்லாமும் நன்றாகத்தான் இருக்கிறது என்ற வாதத்தில் தொடங்கினால் யாருக்கும் எந்த ஆறுதலும் சொல்ல வேண்டியதில்லை. யாருக்கும் எந்த உதவியும் செய்ய வேண்டியதில்லை. இது நெடுநாளாக எஸ்.கே. கடைபிடிக்கும் பாணி. தன்னைத் தேடி வந்த அம்மையார் ஒருவரிடம் எஸ்.கே. அப்படித்தான் பேசினான்.
            அந்த அம்மையாரின் குறைகளை எஸ்.கே. ஏற்றுக் கொண்டிருந்தால் அந்த அம்மையாருக்கு ஆறுதல் சொல்வதிலே எஸ்.கே.வின் ஆயுள் கழிந்திருக்கும். அதன் பின் தன் மனதுக்கு ஆறுதல் சொல்ல முடியாமல் எஸ்.கே. தவியாய்த் தவித்திருப்பான். ஆறுதல் சொல்வதில் இப்படி ஒரு பிரச்சனை இருக்கிறது.
            "பேச்சு என்பது குறையில் ஆரம்பிக்கிறது. ஆறுதலை வேண்டுகிறது. உதவிக் கேட்பதில் வந்து நிற்கிறது!" என்பது எஸ்.கே.வின் கண்டுபிடிப்பு.
            குறைகளை ஆரம்பத்திலே துண்டித்து விடுவான் எஸ்.கே. அதனால் எந்தப் பிரச்சனையும் எழாது.
            குறை சொல்பவர்களை ஆரம்பத்திலே நிறுத்தி விடுங்கள் என்பான் எஸ்.கே. ஒரு கட்டத்தில் அவர்கள் நம்மையும் அப்படித்தான் சொல்வார்கள் என்பது அவனது அனுபவப் பாடம்.
            உறவு, நட்பு என்பதெல்லாம் குறைகளின் மேல்தான் கட்டமைக்கப்படுகிறது. நம் குறைகளுக்கு ஆறுதல் சொல்பவர்களாக, வழிகாட்டுபவர்களாக, உதவுபவர்களாகவே உறவுகளும், நட்புகளும் இருக்கிறார்கள். அவர்களையே உறவுகளாகவும், நட்புகளாகவும் இருக்க நாம் அனுமதிக்கிறோம்.
            ஆகவே, எஸ்.கே. சொல்ல வருவது என்னவென்றால்... குறைகளிலிருந்து துவங்காதீர்கள். அது பேச்சுக்கு இட்டுச் செல்கிறது. பேச்சு சம்பந்தம் இல்லாத பிரச்சனைகளைக் கூட்டி வருகிறது.

*****

No comments:

Post a Comment

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை!

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை! மனிதர்களும் விலங்குகளும் குறிப்பிட்ட காலம் வரை வளர்கின்றனர். தாவரங்கள் அப்படியல்ல. ஆயுள் ம...