12 Dec 2017

தேடல்கள்

தேடல்கள்
ஒவ்வொரு சிறு சிறு இடத்திலும்
காற்று புகாத இருக்கிலும்
தேடிக் கொண்டு இருக்கிறேன்
தேடலின் முடிவில் சிலவற்றைப்
பதிவு செய்கிறேன்
நீங்களும் தேடலில் தொலைந்து போவீர்கள் என்று.
நீங்களோ எனது தேடலின் பதிவுகளையே
உங்களது தேடலின் பதிவுகளாக கூறுகிறீர்கள்
தேடிப் பாருங்கள்
உங்கள் தேடலின் பதிவுகள்
வேறாக இருக்கும்.

*****

No comments:

Post a Comment