12 Dec 2017

பறக்கும் செளகரியங்கள்

பறக்கும் செளகரியங்கள்
தின்ற சோற்றின் எச்சம் போக
வீசியெறியும்
பாலீதீன் உறைகள்
பறந்து போய்
விவசாய நிலத்தில் விழும்
அதை எடுத்துப் போட்டு விட்டு
நிலத்தை உழுது
பயணம் போவோர்க்கும்
வாணிகம் செய்வோர்க்கும்
சட்டங்கள் செய்வோர்க்குமாக என்று
கடனைப் பெருக்கி உடலை உருக்கி
ரியல் எஸ்டேட் உறிஞ்சியது போக
கட்டிடங்கள் முழுங்கியது போக
எஞ்சி நிற்கும் நிலத்தை
மறுபடியும் நெல்லாக்கித் தருவான் விவசாயி
மறுபடியும் பாலீதீன் உறைகளைப்
பறக்க விடுவோம் நாம்
ஒவ்வொரு பயணத்தின் போதும்
நமக்கான செளகரியங்களே பெரிதென

*****

No comments:

Post a Comment

அன்புக்கு உள்ளேயும் அன்புக்கு அப்பாலும்

அன்பைப் புரிந்து கொள்ளும் அசாத்தியம்! அன்புக்காகத் துயருறுவதும் அன்பே துயருறுவதைப் பார்க்க ஏலாது யாருக்குப் பிடிக்கும் துயருற துயரைச...