20 Dec 2017

இருவரும் இருந்த உலகு

இருவரும் இருந்த உலகு
நள்ளிரவு கடிகார மணியோசையும்
கனவில் நீ நடந்து வரும்
கொலுசு மணியோசையும்
ஒன்றெனக் கேட்கிறது
விழிப்புக்கும் கனவுக்கும் இடையேயான
அந்த ஒரு நொடிப் பொழுதில்
காதல் நிர்சலனமாகி விடுகிறது
நான் இருந்த உலகில் நீ இருந்தாய்
நாம் இருவரும் இருந்த உலகை
யாருக்கும் காட்ட இயலாது

*****

No comments:

Post a Comment

அனுபவங்களின் பின் நிற்கும் முடிவுகள்

அனுபவங்களின் பின் நிற்கும் முடிவுகள் ஏதோ ஒன்றைத் தேட தேடுவது கிடைக்கவில்லை என்பதைத் தவிர வேறொன்றும் பிரச்சனையில்லை இவ்வளவுதான் இப்பட...