வார்த்தைகளின் சாயல்கள்
நான்கு நாள்
தொடர்ச்சியாக
நுங்கு வாங்கியதால்
"சார்!"
என்று பார்க்கும் போதெல்லாம்
அழைத்த அந்த
நுங்கு விற்றத் தோழனை
எட்டாம் நாள்
டாஸ்மாக் பாரில்
பார்த்தேன்
"என்ன
அப்படிப் பார்க்குறே?"
என்ற வார்த்தைத்
தோரணையில்
நுங்கைச் சீவுவதைப்
போல்
தோழமையைச்
சீவி விட்டு
நுங்கின் பனஞ்சுளையை
நோண்டுவது
போல்
கண்களை நோண்டி
விடுவேன் என்பது போல
ஒரு கொடூர
பார்வை பார்த்து விட்டு
சென்ற வேகத்தில்
உவ்வே என ஒலியெழுப்பிய
கணத்தில்
பனைமரம் கணக்காய்
விழுந்து கிடந்தவனை
ஆட்டோவில்
கொண்டு வீடு சேர்த்த போது,
"சட்டுன்னு
நீன்னு தெரியாம பேசிட்டேன்.
சாரி சாரே!"
என் ற வார்த்தையில்
நெடுஞ்சாலைகள்
தொலைத்து விட்ட
பனைமரத்தின்
ஏக்கங்கள் பொருந்திய சாயல்கள்.
*****
No comments:
Post a Comment