25 Dec 2017

அது ஒரு காலம்

அது ஒரு காலம்
பாபு சலூனில்
ரகசியமாய்ப் படித்த புத்தகங்கள்
கோபு வீட்டில்
யாருக்கும் தெரியாமல் பார்த்தப் படங்கள்
பகல் பதினொரு மணிக் காட்சிக்காக
சைக்கிள் மிதித்து டவுனுக்குச்
சென்று வந்த நாட்கள்
என்று
படிப்பதில், பார்ப்பதில்
அவ்வளவு கஷ்டம் இருந்தது என்பதைச்
சொன்னால் நம்பவா போகிறான்
கையில் மொபைலோடு
மொட்டை மாடியே கதியெனக் கிடக்கும்
மீசை அரும்பக் காத்திருக்கும்
எட்டாம் வகுப்பு அப்புக்குண்டு மகன்.

*****

No comments:

Post a Comment

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா?

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா? விடிவதற்குள் ஒரு இரவில் நான்கு கோடி பாடல்களைப் பாடும் வல்லமை உள்ளவர்கள் நாட்டில் உள்ளார்களா எனச் சவ...