24 Dec 2017

குத்தாட்டப் பஞ்சாயத்து

குத்தாட்டப் பஞ்சாயத்து
கோயில் திருவிழா குறித்த
பஞ்சாயத்தில் கடைசியாக
எதிர்ப்பு தெரிவித்த இளைஞர்களுக்காக
ரங்குமணி தாத்தா சென்னார்,
திருவிழா நடந்தாத்தான்டா
குத்தாட்டம் வைக்கலாம்.
எதிர்ப்பின் ஓசை அடங்கி
ஒவ்வொருவரும் கலைந்து செல்கையில்
எவளைக் கூப்பிட்டு ஆட வைக்கலாம்
என்ற குசுகுசுப்பில்
திருவிழா பிரச்சனை குறித்த மூச்சு
அதன்பின் எழவில்லை.

*****

No comments:

Post a Comment